ரயில்வே அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த திருமாவளவன்

80பார்த்தது
ரயில்வே அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த திருமாவளவன்
ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினர் திருமாவளவன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடிதம் எழுதியுள்ளார். அதில், சிதம்பரம் வழியாக கடலூர் மைசூர் ரயிலுக்கான ஒப்புதல் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பே வழங்கப்பட்டிருந்தாலும் இன்னும் அதற்கான குறிப்பாணை அளிக்கப்படவில்லை. ஆக அதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

சிதம்பரம் வழியாக செல்லும் கடலூர் மைசூர் ரயில் சேவையை விரைவில் தொடங்கிடும் வகையில் கடலூரில் நடக்கும் ரயில்வே பணிகளை விரைவுப்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிதம்பரம் ரயில் நிலையத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் மற்றும் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், கோயம்புத்தூர் ஜன் சதாப்தி ரயிலை சிதம்பரம் வரையில் நீட்டிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி