தேனியில் ரூ. 10. 36 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் தினத்தினை முன்னிட்டு தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அனைத்து துறைகளில் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் சார்பில் 1495 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 10. 36 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது