தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா உட்பட்ட ராஜதானி அருகே உள்ள கீழ மஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஒரு சமூக மக்கள், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கிட கோரி இன்று மதியம் தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயிலை மறித்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது ஊரில் நடந்த திருவிழாவில் முன்னால் இராணுவ வீரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் தர்ணாவில் ஈடுபட்டனர்