தமிழகத்தில் நீலகிரி, கோவை உட்பட 24 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுத்துள்ளது.
மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வட மடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் விதமான மழை வரை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று (ஏப்ரல். 16) தமிழகத்தில், வேலூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, நாமக்கல், கோவை, நீலகிரி, ஈரோடு, பெரம்பலூர், சேலம், கரூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம் ஆகிய 24 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.