தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் செப். 7, 8, 9 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குமாறு தேனி எஸ். பி. யிடம் இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் இன்று (ஆக. 27) மனு அளித்தனர். தொடர்ந்து எஸ். பி அலுவலகத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு விநாயகர் சதுர்த்தி விழா அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டது.