தேனி: மங்களதேவி கண்ணகி கோவில் திருவிழா ஆலோசனை கூட்டம்

70பார்த்தது
தேனி: மங்களதேவி கண்ணகி கோவில் திருவிழா ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்டம், தமிழ்நாடு-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா (12.05.2024) அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேக்கடியில் உள்ள ராஜீவ் காந்தி கலை அரங்கத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங், மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் வி. விக்னேஷ்வரி, ஆகியோர் தலைமையில் இன்று (04.04.2025) முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. 

திருவிழாவினை சிறப்பாக கொண்டாட அனைத்து பக்தர்களும் இரு மாநில மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் வனப்பாதுகாவலர் மற்றும் துணை இயக்குநர் சி. ஆனந்த், மாவட்ட வனத்துறை அலுவலர் திரு ஜே.ஆர். சமர்த்தா, மாவட்ட வருவாய் அலுவலர் மகாலெட்சுமி, ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், மற்றும் பிற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி