மனைவியை காணோம்.. மாமியார், மகளை சுட்டுக்கொன்ற கணவர் தற்கொலை

58பார்த்தது
மனைவியை காணோம்.. மாமியார், மகளை சுட்டுக்கொன்ற கணவர் தற்கொலை
கர்நாடக மாநிலம் சிக்மங்களூருவைச் சேர்ந்த ரத்னாக்கர் (40) என்பவருக்கும் அவரது மனைவிக்கு இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது மனைவி தனது மகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். மனவேதனையில் இருந்துவந்த ரத்னாக்கர், சம்பவத்தன்று தனது மனைவியைத் தேடி மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு மனைவி இல்லாத விரக்தியில், அங்கிருந்த தனது 7 வயது மகள், 26 வயது மைத்துனி, மாமியார் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து, தானும் தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்புடைய செய்தி