உத்தர பிரதேசம்: ஃபிரோசாபாத்தை சேர்ந்த தம்பதி ரூபேஷ் (35) - ரீனா (32). இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ரூபேஷ் கடந்த பிப். 13-ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவரின் இறப்பை தாங்க முடியாமல் தவித்த ரீனா நேற்று (பிப். 15) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாக அவர்களின் குழந்தை அனாதையாகியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.