டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். "இதுபோன்ற பெருந்திரள் மக்கள் கூடும் விழாக்களை நடத்தும் போது, உரிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகளை செய்து தர வேண்டியது அரசின் கடமை. உடனடியாக பாஜக அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.