கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடைப்பட்டதால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த ஒருவருக்கு டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவர்கள் தையல் போட்டார்கள். இதனிடையில் மருத்துவமனையின் மோசமான நிர்வாகத்திற்காக அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.