திமுகவில் மேலும் 10 மாவட்டங்களை பிரிக்க கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க முடிவு செய்துள்ளனர். 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் உள்ள மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதிய மாவட்ட செயலாளர்களும் நியமிக்கப்படுவார்கள். மகளிருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.