பிரதமர் மோடியை விமர்சித்து கார்ட்டூர் படம் வெளியிட்டதாக விகடன் இணையதளத்தை மத்திய அரசு முடக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விகடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தளம் முடக்கப்பட்டதாக மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக தொடர்ந்து செயல்படுகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம்; இயங்குவோம். அட்டைப்படத்திற்காக இணையதளம் முடக்கப்பட்டிருந்தால் சட்டப்படி எதிர்கொள்வோம்” என குறிப்பிட்டுள்ளது.