ஆண்களுக்கு, தங்களது அந்தரங்க பகுதியில் இருக்கும் முடியை அகற்றலாமா? வேண்டாமா? என்ற கேள்வி இருக்கும். அதற்கு பதிலளிக்கும் விதமாக, அந்தரங்க பகுதியில் இருக்கும் முடிகளை அகற்ற வேண்டிய அவசியமில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இது பிறப்புறுப்பை தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பதாக கூறப்படுகிறது. அதை அகற்ற வேண்டும் என்றால், ஷேவிங் கிரீம் மற்றும் மாய்ஸ்சரைசர் போன்றவற்றை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. முடியை நீக்கிய பின்னர், இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.