மஹிந்திராவின் புதிய EV மாடல்களான XEV9e மற்றும் BE6, விற்பனைக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்ட முதல் நாளே 30,179 புக்கிங்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது. மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e மின்சார கார்கள் 170kW மோட்டார் 59kWh பேட்டரி மற்றும் 210kW மோட்டார் 79kWh பேட்டரி என்று 2 மாடல்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் விலை, ரூ.18.90 லட்சம் முதல் ரூ. 30.50 லட்சம் வரை உள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட கார்கள், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டெலிவரி செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.