மகா கும்பமேளாவிற்கு செல்லும் பக்தர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் நேற்று (பிப்.15) டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள் என தெரிந்தும், அரசின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.