சிவகங்கையை சேர்ந்த திவ்யா - சன்னா பாபு தம்பதிக்கு 4 வயதில் மகள் உள்ளார். இவரை கடந்த ஜன.16-ல் பாம்பு கடித்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனை குழந்தைகள் நல அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு தொடர் தீவிர சிகிச்சைக்குபின் சிறுமி பூரணமாக குணமடைந்தார். இதையடுத்து நேற்று (பிப். 15) மருத்துவர்கள் முன்னிலையில் சிறுமி தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.