உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

65பார்த்தது
உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை
தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை காந்தி நகரை‌ சேர்ந்தவர் தங்க உமா (43) இவரது கணவர் அன்பு ராஜன். தங்க உமா கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு கரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், தங்க உமா சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தங்க உமாவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக கணவர் அன்பு ராஜன், அவரது குடும்பத்தினர்கள் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தங்க உமாவின் இதயம், 2 கண்கள், நுரையீரல், கணையம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருப்பவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து உடல் உறுப்புகளை தனமாக வழங்கிய தங்க உமாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் துணை ஆட்சியர் கண்ணன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி