சென்னை காட்டாங்குளத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, "மோடி சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு நான் செய்வேன். 36 வயதில் கட்சியில் இணைந்து இன்று மேலிடம் கொடுத்த பொறுப்பை ஏற்று கவனித்து வருகிறேன். பிரதமர் நரேந்திர மோடிக்காக அரசியலுக்கு வந்தவன் நான். அவர் தொண்டராக இரு என்று கூறினால், தொண்டராக பணியாற்றுவேன். நான் கட்சி, சித்தாந்தம் பார்த்து அரசியலுக்கு வரவில்லை. மோடி என்ற மனிதருக்காக வந்தேன்" என பேசினார்.