சென்னை மேற்கு மாம்பலத்தில் வீட்டுக்கு திருட வந்தவர்கள் மோட்டாரை ஆன் செய்ததால், நெதர்லாந்து நாட்டில் உள்ள வீட்டின் உரிமையாளருக்கு அலெர்ட் சென்றுள்ளது. சிசிடிவி மூலம் கொள்ளையர்கள் இருப்பதைப் பார்த்து, பக்கத்து வீட்டு நபருக்கு தகவல் அளிக்க, அவர் போலீசாரை வரவழைத்துள்ளார். சில மணி நேரத்தில் போலீசார் கொள்ளையர்களை பிடித்துள்ளனர். வீட்டின் உரிமையாளர் வெங்கட்ரமணன் அனைத்து மின் சாதனங்களையும் செல்போன் மூலம் கட்டுப்படுத்தும் ஆட்டோமேஷன் செய்துள்ளார். இதனால் அலர்ட் சென்றுள்ளது.