கத்தோலிக்க திருச்சபைதான் நாட்டின் பெரிய நிலவுடமையாளர் என எழுதப்பட்ட கட்டுரையை RSS இணையதளமான Organiser நீக்கியிருக்கிறது. தேவாலயம், வக்ஃப் வாரியம் போன்ற மத நிறுவனங்களின் சொத்துகள்தான் எல்லா மத அமைப்புகளின் பிரச்சினை என்றால், எல்லா மத சொத்துகளையும் ஆராய்வதற்கென ஒரு சட்டத்தை கொண்டு வரலாமே? ஏன் தனித்தனி சட்டங்கள்? மேலும் கிறித்துவ கல்வி நிறுவனங்களுக்கு குழந்தைகளை படிக்க அனுப்பும் அமைச்சர்களின் பட்டியல் நீளமானது என ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் கூறியுள்ளார்.