சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் விதிகளை மீறியதாக குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் இஷாந்த் ஷர்மாவிற்கு, அவரது ஊதியத்திலிருந்து 25% அபராதம் விதித்தது பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. அவர் என்ன தவறு செய்தார் என்ற விவரம் வெளியாகாத நிலையில், விதி 2.2ன் கீழ் கிரிக்கெட் உபகரணங்கள், ஆடைகள், மைதான உபகரணங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.