கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்தனர் வனத்துறையினர்
தேனி மாவட்டம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.