தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலராக சந்திரசேகரன் பணியாற்றி வருகிறார்.
இவரிடம் அதே ஊரில் காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் சிவானந்தன் என்பவர் நீதிமன்ற வழக்கின் அடிப்படையில் அவருக்கு கிடைக்கப்பெற்ற வீட்டிற்கு தேவையான உரிய ஆவணங்களுடன் சென்று வீட்டு வரி ரசீதில் பெயர் மாற்றம் செய்வதற்காக ஊராட்சி செயலர் சந்திரசேகரனிடம் மனு செய்துள்ளார். அப்போது ஊராட்சி செயலர் சந்திரசேகர் ரூபாய் பத்தாயிரம் லஞ்சப் பணம் வேண்டும் என கேட்டதாக கூறி புகார் தாரர் சிவானந்தன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவலினை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர்ராஜன் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்த போலீசார் ரூபாய் 8 ஆயிரம் ரொக்க பணத்தை ரசாயனம் தடவி சிவானந்தன் இடம் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட சிவானந்தனை ஊராட்சி செயலரிடம் கொடுத்துள்ளார் கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஊராட்சி செயலர் சந்திரசேகரனை கைது செய்து
சிறையில் அடைத்தனர்.