தமிழக கேரள எல்லை பகுதியான தேனி மாவட்டம் குமுளி, கம்பம் மெட்டு ஆகிய சோதனை சாவடிகள் அருகே சுகாதாரத் துறை சார்பாக நிபா வைரஸ் தடுப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் எதிரொலியாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் சஜீவனா உத்தரவுப்படி மாவட்ட சுகாதார அலுவலர் ஜவஹர்லால் ஆலோசனைப்படி வட்டார அலுவலர் முருகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பழனி குமாரசாமி மேற்பார்வையில் சுகாதாரக் குழுவினர் கேரளத்திலிருந்து தேனி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களை தடுத்து நிறுத்தி பயணிகளுக்கு காய்ச்சலுக்கான அறிகுறி உள்ளதா என சுகாதார ஆய்வாளா்கள் வெப்பமானி மூலம் சோதனை செய்து வருகின்றனா்.