சின்னமனூர் அருகே குடிநீர் குழாய் உடைந்து ஆறாக ஓடியது

55பார்த்தது
தேனி மாவட்டம் சின்னமனூர் பெருமாள் கோவில் தெருவில் முல்லைப் பெரியாறு இலிருந்து ஓடைப்பட்டிக்கு கூட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.


ஓடைப்பட்டி பேரூராட்சியில் சுமார் 15 வார்டுகள் உள்ளன இங்கு சுமார் 10, 000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இவர்களுக்கு சின்னமனூர் முல்லைப் பெரியாறு ஆற்றில்இருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு செல்லப்படுகிறது இன்று மாலை முல்லை பெரியார் இருந்து ஓடைப்பட்டிக்கு செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 20 அடிக்கு மேல் தண்ணி பீச்சி அடித்தது.

அதனை அடுத்து நிர்வாகத்திற்கு தகவல் கூறிய பின்பு குழாய் உடைப்பு ஏற்பட்டது தண்ணீர் நிறுத்தப்பட்டு பின்னர் நிர்வாகத்தின் அதனை சரி செய்ய முயற்சி செய்து வருகின்றன.

சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இந்த தண்ணீர் வீணாக சென்றதால் சுமார் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக சென்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி