ஸ்ரீ பிரம்மதேவன் கோவில் மகா கும்பாபிஷேகம்

74பார்த்தது
ஸ்ரீ பிரம்மதேவன் கோவில் மகா கும்பாபிஷேகம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜக்கமநாயக்கன்பட்டி மகாலிங்க நாயக்கர் தெரு, சிவபக்தர் குல இராஜகம்பள தொட்டிய நாயக்கர் கொடையாணி பொம்மு பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பிரம்மதேவன் ஸ்ரீ பார்வதி அம்மன் திருக்கோவில் ஜீர்ணோத்தாரண மகா கும்பாபிஷேகம் 09-06-2024 அன்று காலை 11. 30 மணிக்கு மேல் 12 மணிக்குள் யாத்ர தானம், கடம் புறப்பாடு, நூதன விமானம், தீபாராதனை மாலை 4. மணிக்கு மேல் கரகம் முளைப்பாரி ஊர்வலம் ஆகியன சீரும் சிறப்புமாய் நடைபெற்றது. அது சமயம் பக்தர்களும் ஊர் பொதுமக்களும் தாய்மார்களும் ஆன்மீக அன்பர்களும் விழாவில் பங்கு பெற்று அருள்மிகு பிரம்மதேவன் பார்வதி அம்மனின் அருள்ஆசி பெற்றுச் சென்றனர். விழாவின் தலைமை கலைக்கோட்டு மகாமுனி, மான் கொம்பு அருள் பெற்ற திருவருட்ஜோதி P. ஸ்ரீ ராம் சாக்ரடீஸ் வீர ஜக்கதேவி உபாஸகர் மற்றும் விழா கமிட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி