ஆண்டிப்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை குறைவு

83பார்த்தது
ஆண்டிப்பட்டி மலர் சந்தையில் வரத்து கூடியதால் பூக்களின் விலை குறைவு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பூக்கள் அதிகளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று முகூர்த்த நாட்கள் இல்லாததால் 2500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ 600 ரூபாய்க்கு இன்று ஏலம் போனது. மேலும் பிச்சிப்பூ முல்லை பூ 300 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த மாதங்களில் முகூர்த்த நாட்கள் இல்லாததால் பூக்களின் விலை இன்னும் குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பூ விவசாயிகள் பெரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி