உலக அழிவிற்கு இன்னும் 90 வினாடிகள் தான் இருக்கின்றது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா, ஆம் இரண்டாம் உலகப்
போர் காலத்தில் ஜப்பான் மீது
அமெரிக்கா அணு ஆயுதம் வீசியது நாம் அனைவரும் அறிந்தததே. அந்த அணு ஆயுதம் வெடித்து இரண்டு ஆண்டுகள் கழித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஜே ராபர்ட் ஓப்பன்ஹைமர் ஆகியோர் இணைந்து டூம்ஸ்டே என்ற கடிகாரத்தை உருவாக்கினர். அணு ஆயுதங்கள்,
போர் சூழும் அபாயம். பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் என்று பல்வேறு விஷயங்கள் இந்த கடிகாரத்தின் மூலம் கணக்கிடப்படுகிறது. இதில் நேரம் எந்தளவுக்குக் குறைவாக இருக்கிறதோ. அந்தளவுக்கு நாம் பேரழிவுக்கு அருகே உள்ளோம் என்று அர்த்தமாகும் எனக் கூறப்படுகிறது. அந்தவகையில் தற்போது இந்த கடிகாரத்தில் உலக அழிவிற்கு 90 வினாடிகள் தான் உள்ளது என காட்டுகிறது.