அமெரிக்கா-USA

வைரலாகும் மெரினா கடற்கரை பானிபூரி பெண் வீடியோ

பிரபல அமெரிக்கா யூடியூபரான கிறிஸ் லூயிஸ் தென்னிந்திய பயணம் குறித்த வீடியோ வந்து வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சென்னை மெரினா கடற்கரையில் பேல் பூரி விற்கும் பெண்ணிடம் அவர் உரையாடுவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், அமெரிக்கரான லூயிஸிடம் அந்தப் பெண் ஆங்கிலத்தில் உரையாடுகிறார்.‌ பின்னர் பேல் பூரியை வாங்கிவிட்டு "ரொம்ப நன்றி தங்கச்சி" என தமிழில் கூறுகிறார். இதில், சாலையோரத்தில் கடை வைத்திருந்தாலும் கல்வியின் முக்கியத்துவத்தை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து இருப்பதால் தான் இப்படி ஒரு சரளமான உரையாடலை காண முடிகிறது என வீடியோ பார்ப்பவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். Video courtesy: chris Lewis YouTube channel.