கல்வி உரிமை சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்கள் உண்மையிலேயே வருந்தத்தக்கது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தடையின்றி 8ம் வகுப்பு வரை கல்வி பெறுவதில் ஒன்றிய அரசு பெரிய தடைக்கல்லை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் கல்வி உரிமைச் சட்ட விதிகள் குறித்து எந்தவகையிலும் குழப்பமடையத் தேவையில்லை" என தெரிவித்துள்ளார்.