கே.எல்.ராகுலை கடுமையாக சாடிய அணியின் உரிமையாளர்

53பார்த்தது
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் படுமோசமான தோல்வியை அடைந்ததால் லக்னோ அணி கேப்டன் ராகுலை அணியின் உரிமையாளர் கோயங்கா கடுமையாக சாடும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய போட்டி(மே 8) முடிந்தவுடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கடும் அதிருப்தியில் இருந்தார். அவர் நேராக மைதானத்திற்குள் நுழைந்து கே.எல். ராகுலை சந்தித்து கடுமையாக பேசினார். அவர் கைகளை ஆட்டி, முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு பேசிய காட்சிகள் மைதானத்தில் இருந்த அனைத்து கேமராக்களிலும் பதிவானது. அனுபவமிக்க வீரரை இப்படி பொதுவெளியில் கடுமையாக திட்டி தீர்த்த கோயங்காவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி