ரூ.1,000 வழங்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் ஜுலையில் தொடக்கம்

20299பார்த்தது
ரூ.1,000 வழங்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் ஜுலையில் தொடக்கம்
அரசுப்பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் வருகிற ஜுலை மாதம் தொடங்க உள்ளதாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அறிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. அதே போல், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஆகியவற்றை தொடர்ந்து, தற்போது மாணவர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படவுள்ளது.

இதற்கான முதற்கட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து, பள்ளிகள் தொடங்கிய பிறகு இதற்கான அனைத்து பணிகளையும் கல்வித்துறை அதிகாரிகள் முடிக்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி