பூண்டு ஒரு கிலோ ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விற்பனை கடையில் ஒரு கிலோ பூண்டு விலை ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.280க்கு விற்கப்பட்ட பூண்டு நேற்று ரூ.320க்கு விற்பனையானது. ஒரே நாளில் ரூ.20 அதிகரித்து இருப்பதால் சில்லறை விற்பனை கடைகளில் மேலும் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.