டெல்லியில் நேற்று முன்தினம் (டிச. 02) இளம்பெண்ணுக்கும், இளைஞருக்கும் திருமணம் நடக்க இருந்தது. திருமண மண்டபத்தில் மணமகள் அருகே இருந்த மணமகன் அடிக்கடி எழுந்து குளியலறைக்கு சென்றார். சந்தேகமடைந்த மணப்பெண் உறவினரிடம் சொன்னார். அவர் பின்னால் சென்று பார்த்த போது நண்பர்களுடன் மணமகன் குளியலறையில் மது அருந்தியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தியதோடு போலீஸ் புகார் கொடுத்தனர்.