சிறுமியை முதுகில் செங்கல் சுமக்க வைத்து கொடுமை

89013பார்த்தது
உத்தர பிரதேச மாநிலத்தில் சிறுமியின் முதுகில் செங்கற்களை வைத்து ஒருவன் கொடுமைப்படுத்திய வீடியோ தற்போது வெளியாகி கண்டனங்களை பெற்று வருகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள போலீசார் இந்த வீடியோ ஒரு வருடத்திற்கு முந்தையது என்று கூறினர். ஆனால் போலீசார் கடந்த காலங்களில் இது குறித்து எப்ஐஆர் பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்டுகிறது. சிறுமியின் சமீபத்திய நிலைமை இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.