"நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை"

62பார்த்தது
"நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை"
நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர், "சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை. அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை. சமூகநீதிக்கு எதிரானவை. நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி