பாஜகவுடன் கூட்டணிக்குச் செல்வதற்கு முன், நீட் விலக்கு அளித்தால்தான் கூட்டணி என வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? என நீலகிரியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்டுள்ளார். மேலும், ராகுல்காந்தி மூலமாக, இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு அளிக்கப்படும் என நாங்கள் சொல்ல வைத்தோம். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நிச்சயமாக நீட் விலக்கு கிடைத்திருக்கும் என கூறினார்.