மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 107 பேர் உயிரிழந்துள்ளனர். மியான்மரில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் 103 பேர் பலியான நிலையில், 350 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், தாய்லாந்தில் 4 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிர்பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.