ஸ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் – தாட்சாயணி தம்பதி. இவர்களது மகன் தமிழரசன் (12). இந்நிலையில், தமிழரசன் இன்று (மார்ச் 28) மதியம் குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் மூலம் சில்வர் பாத்திரத்தில் வெந்நீர் சுட வைத்தார். பின்னர் நீர் சுட்டுவிட்டதா என்பதை அறிய கையை வைத்து தொட்டுப்பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.