தஞ்சை ஈச்சங்கோட்டை டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி 4ம் ஆண்டு மாணவிகள் 11 பேர் கொண்ட குழுவினர் ஊரக வேளாண் பணி அனுபவம் பெறும் திட்டத்தின்கீழ் களப்பயிற்சி பெற்றனர்.
திருவிடைமருதூர் பேரூராட்சி உரக்கிடங்கிற்கு சென்று மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் ஆகியவை தரம் பிரிக்கும் முறை, மக்கும் குப்பைகளை இயற்கை உரமாகவும் மண்புழு உரமாகவும் தயாரிக்கும் விதம், இயந்திரத்தின் செயல்பாடு ஆகியவற்றை பார்வையிட்டு அறிந்துகொண்டனர். இயற்கை உரமிட்டு காய்கனி செடிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டத்தை பார்வையிட்டனர். பேராசிரியர்கள் அருள்மொழி, ராஜசேகர், ஜெயசங்கர் ஆகியோர் வழிகாட்டிகளாக செயல்பட்டனர். பேரூராட்சி தலைவர் புனிதா, செயல் அலுவலர் ராஜதுரை ஆகியோர் வழிநடத்தினர்.