'அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் கூறவில்லை என விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியுள்ளார். மேலும், அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவுமில்லாமல் அரசமைப்புச் சட்டத்தை ஒரு கையிலும் பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு சமரச 'பாயாசம்' கிண்டுகிற ஒருவரோடு மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றுதான் சொன்னார் என கூறியுள்ளார்.