சென்னை மாதவரம் பகுதியில் இயங்கி வரும் திருமண மண்டபத்தில் லிஃப்டில் சிக்கிய 11 பேர் மீட்கப்பட்டுள்ளார். மேலும், இதில் மயக்கம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு 11 பேரை மீட்டனர். ஒரே நேரத்தில் அதிகம் பேர் லிஃப்டில் ஏறியதால், பாதியிலேயே லிஃப்ட் நின்றதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.