சிறந்த சாதனை புரிந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக மாநில அளவிலான விருதுகளை 16 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (டிச., 05) நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் சிஜி தாமஸ் வைத்யன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.