வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட ஐயப்ப பக்தர்களுக்கு இன்று (டிச. 04) போலீசார் மதிய உணவு வழங்கினார்கள். அந்த உணவில் மாமிசம் கலந்திருந்ததாக கூறப்படும் நிலையில் அதை கண்டறிந்த ஐயப்ப பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இத்தனை நாட்கள் நாங்கள் இருந்த விரதம் வீணாகிவிட்டதாகக் கூறி, போலீசாரிடம் பக்தர்கள் கடும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.