முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச.5) மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அவருடன் சேர்ந்து அதிமுக தொண்டர்களும் மரியாதை செலுத்தினர். இந்த நிலையில், அங்கிருந்த பெண் தொண்டர் ஒருவர், ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் பார்த்து, ‘அம்மா.. அம்மா..’ என கதறி அழுதார். மேலும், அங்கு வந்த பொதுமக்கள் தங்களது மரியாதை செலுத்திச் சென்றனர்.