மழையால் நாசமான பயிர்கள்.. கடும் வேதனையில் விவசாயிகள்

84பார்த்தது
கடலூர் மாவட்டம் வெள்ளப்பாக்கம் கிராமத்தில் 1,500 ஏக்கரில் நெற்பயிர்கள், வாழை உள்ளிட்டவை நடவு செய்யப்பட்டு இருந்தன. அவை அனைத்தும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீரில் மூழ்கி நாசமாகின. இன்னும் சில நாட்களில் அறுவடை செய்ய தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தால் செய்வதறியாமல் அப்பகுதி விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: தந்தி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி