பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் 'டிராகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், 'டிராகன்' படத்தில் பிரபல யூடியூபர்களான வி.ஜே.சித்து அன்பு என்ற கதாபாத்திரத்திலும், ஹர்ஷத் கான் வெற்றி என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாக படக்குழு எக்ஸ் தளத்தில் போஸ்டர் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த திரைப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.