தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை அருகேசனிக்கிழமைமுதியவர் தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டார். கல்லணையை அடுத்த பாதிரகுடி பேருந்து நிறுத்தம் அருகில்உள்ள காட்டுப் பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் முதியவர் ஒருவர் தூக்கிட்டு இறந்த நிலையில்தகவலின்பேரில், நிகழ்விடத்துக்கு வந்த தோகூர்
போலீஸார், முதியவரின் சடலதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அவர் புதுக்கோட்டை மாவட்டம் கட்டிவயல்பாரதி நகரை சேர்ந்த நல்லையாமகன் செல்வம் (60) என்பதும், வயது முதிர்வின் காரணமாக மனஉளைச்சலில் இருந்தவர் இங்குவந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து அவரது மனைவிபார்வதி அளித்த புகாரின்பேரில், தோகூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.