பசுபதிகோவில் வடிகால் வாய்க்காலை தூர்வார பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகளே தூர்வாரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது
தஞ்சாவூர் மாவட்டம் பசுபதி கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் பசுபதி கோவில் வடிகால் வாய்க்காலை தூர்வார வலியுறுத்தி பலமுறை அரசிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது வடிகால் வாய்க்கால் தூர்வரப்படாததால் கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் வயல்களில் மழை நீர் தேங்கி நீர் வடிய வழியில்லாமல் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஸ்டாலின் அரசிடம் முறையிட்டு எந்த ஒரு பயனும் இல்லை என விவசாயிகளை தங்கள் வயல்களில் விளைந்த பயிர்களை காப்பாற்ற வடிகால் வாய்க்கால்களை சொந்த முயற்சியில் தூர்வாரி வருகின்றனர்.
விவசாயிகளுக்காக செயல்படும் அரசு என பெருமை கொள்ளும் ஸ்டாலின் அரசு விவசாயிகள் நலன் மீது எந்த ஒரு அக்கறையும் இல்லை என குற்றம் சாட்டி வருகின்றனர்.