செங்கிப்பட்டியில் நிழற்குடையை அமைச்சர் திறந்தார்

53பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி அருகே செங்கிப்பட்டியில் நிழற்குடையை அமைச்சர் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். திருக்காட்டுப்பள்ளி அருகே செங்கிப்பட்டியில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட உயர்மட்ட கூரையுடன் கூடிய பேருந்து நிழற்குடை ரூபாய் ஒரு கோடியில் அமைக்கப்பட்டது. அந்த நிழல் குடையை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை வைத்தார். எம் பி முரசொலி, திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரன், பூதலூர் ஒன்றிய குழு தலைவர் கல்லணை செல்லக்கண்ணு மற்றும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி